Sunday, 23 June 2013

நீங்கள் பயன்படுத்திய செல்போன்

நீங்கள் பயன்படுத்திய செல்போன் ஐ நீங்கள் கடையிலோ, அல்லது உங்கள் நண்பரிடத்திலோ, அல்லது வேறு யாரிடமோ விற்கப் போகிறீர்களா..? அல்லது சிறிது நாட்கள் பயன் படுத்த கொடுக்கப் போகிறீர்களா..?
கவனமாக செயல் படுங்கள்...
காரணம் நீங்கள் மொபைலை பயன்படுத்தும்போது உங்களின் அந்தரங்க செயல்கையும், உங்கள் குடும்பத்தினரையும் உங்கள் செல்போனில் போட்டோவோ, அல்லது வீடியோவோ எடுத்திருப்பீர்கள்...
அதை நீங்கள் விற்க்கும்போது கவனிக்காமல் "மெமரி" கார்டுடன் விற்று விட்டால் ...உங்களுக்கு ஆபத்து காத்திருக்கிறது...
இதோ ...உங்களுக்காக ...
என் தோழியின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தின் நினைவூட்டல்...
அவருக்கு அவரது கணவர் விலை உயர்ந்த செல்போன் வாங்கிக் கொடுத்தார்...நாம்தானே இந்தப் போனை பயன்படுத்தப் போகிறோம் என்ற ஆர்வத்தில்...தன்னுடைய அந்தரங்க காட்சிகளையும், தன்னையும் ,தன் குடும்ப உறுப்பினர்களையும் வித விதமாக போட்டோவும், விடியோவும் எடுத்தார்..
இறைவனின் நாட்டம் அவருக்கு கொஞ்சம் கஷ்ட சூழ்நிலை வந்தது...
தனது செல்போன் ஐ விற்க வேண்டிய நிற்பந்தம். கடையில் கொடுத்தா சரிவராதுன்னு தனது தோழியிடம் விற்றிருக்கிறார்...மெமரி கார்டுடன்...
வாங்கியவர் தனது கணவரின் பயன்பாட்டிற்கு கொடுத்திருக்கிறார்...
அந்தக் கணவர் ஒரு சுற்றுலாவுக்கு செல்லும்போது. அந்தப் போனில் விடியோவும்,போட்டோவும் எடுக்க முற்படும்போது "பிரிவியூவை" நோட்டம விட்டிருக்கிறார்...
ஏற்கனவே பயன்படுத்திய ஏன் தோழியின் அந்தரங்க காட்சிகளும்,போட்டோவையும் கண்டவுடன்...அந்தப் போனை சுவிட்ச் ஆஃப் " செய்து விட்டு,
டூர் முடித்து வந்தவுடன் அந்தப் போனை தந்து மனைவியிடம் கொடுத்து
"நீ முதல் வேலையாக இந்தப் போனை உன் தோழியிடம் கொடுத்து வா "
நமக்கு அவர் பணம் கூட கொடுக்க வேண்டாம், ,அவருக்கு நாம் செய்த உதவியாக இருக்கட்டும் " என்று தன் மனைவிடம் சொல்லி அனுப்பி வைத்தார் . அந்த மதிப்பிற்குரிய கணவர்.
இறைவன் காப்பாற்றினான் ஒரு நல்லவர் கையில் அந்தப் போன் போனதால அந்தப் பெண் ( என் தோழி) தனக்கு ஏற்பட இருந்த ஆபத்திலிரிந்து காப்பாற்றப் பட்டார்....
இதே ஒரு கெட்டவரின் கையில் அந்தப் போன் கிடைத்திருந்தால்...
அவர் எந்தவிதத்தில் எல்லாம் பாதிக்கப்பட்டிருப்பார் என்று " எண்ணிப்பார்க்கும்போதே ..உடல் பதறுகிறது..
ஆகவே சகோதர, சகோதரிகளே !
நீங்கள் பயன்படுத்தும் "மொபைல்"ஐ விற்கும் சூழ்நிலை வந்தால் அதிகம் எச்சரிக்கையுடன் செயல் படுங்கள்

No comments:

Post a Comment