Tuesday, 11 February 2014

எத்தனை பேருக்கு கலீபா உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற வரலாறு தெரியும்.

ஜார்ஜ் புஷ்ஷை விட, நரேந்திர மோடியை விட, ராம கோபாலனை விட ஆயிரம் மடங்கு மூர்க்கத்தனமான இஸ்லாமிய எதிரியாக இருந்தவர் கலீபா உமர் (ரலி) அவர்கள்.

அந்த கோபத்தின் உச்ச கட்டம் தான், நபி அவர்களின் தலையை கொய்திட ஏந்திய வாளுடன் புறப்பட வைத்தது அவரை.

போகின்ற வழியில் அவருக்கு ஒரு அதிர்ச்சி...!!!

ஆம்....!!அவரின் அன்பு சகோதரி தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்டார் என்று நண்பர் மூலம் கிடைத்த அதிர்ச்சி செய்தி தான் அது.

இப்போது கோபம் தடம் மாறியது தன் தங்கை மீது..!!

தங்கை வீட்டிற்கு வந்து, அவளை கண் மூடித்தனமாக தாக்கினார் அந்த மூர்க்கர்.

என்னை நீ கொன்றே போட்டாலும், ஒரு கணமேனும் இஸ்லாத்தை விட்டு பிரியமாட்டேன் என்று தங்கை சொல்ல, எதற்கும் அஞ்சாத அந்த மாவீரன் நிலை குழைந்து, என் தங்கையை கூட இந்த மார்க்கத்தை விட்டு திருப்ப முடியவில்லையே....!! என்று வேதனையில் கலங்கி அவளிடம் கேட்டார். "சரி, அந்த மார்க்கம் உனக்கு கற்றுக்கொடுத்ததை எனக்கு கற்று கொடு" என்றார்.

தங்கை ஓதிய திருக்குர் ஆன் வசனங்கள் அவரை தள்ளாடச் செய்தது. கண்களை குளமாக்கியது

கண்ணில் கண்ணீர் பெருக்கோட உமர் கேட்டார், இந்த வசனங்களையா நானும், அரேபியர்களும் எதிர்த்து வந்தோம்.

அவ்வளவு தான்.அந்த கணமே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.

மன்னாதி மன்னர்களையெல்லாம் மண்டியிட வைத்த மார்க்கம் இது.....!!

எத்தனை கைகள் சேர்ந்தாலும் இஸ்லாம் என்ற இந்த சூரியனை மறைத்து விடவும் முடியாது. அழித்து விடவும் முடியாது....

இது இறைவனின் மார்க்கம்..... நினைவில் கொள்ளுங்கள்...

நன்றி:- குலசை வாய்ஸ். & Mohamed Sulaiman.

No comments:

Post a Comment