இணையதளம் வழியாக தகவல்களை பெறுவதற்கு நாம் குரோம் மற்றும் பயர்பாக்ஸ் போன்ற பிரவுசர்களை பயன்படுத்துகிறோம். ஆனால் இவற்றில் இருந்து கிடைக்கும் தகவல்கள் 4 சதவீதம் அளவிற்கு தான் உள்ளது.
பெரும்பான்மையான தகவல்கள் மறைந்து கிடக்கின்றன. அவற்றை டீப் வெப் வழியாக சேகரித்து கொள்ளலாம். அதற்கு டி.ஓ.ஆர். என்ற பிரவுசர் பயன்படுகிறது.
இன்விசிபிள் வெப்
வழக்கமாக கூகுள் அல்லது யாஹூ போன்றவற்றின் வழியாக தகவல்களை எடுத்து கொள்ளலாம். இவை தொடர்ந்து அரசாங்கத்தால் கண்காணிக்கப்பட்டு வருபவை ஆகும். எனவே இது விசிபிள் வெப் என அழைக்கப்படுகிறது.
ஆனால், டீப் வெப் ஆனது மீதமுள்ள 96 சதவீத தகவல்களை கொண்டிருப்பதுடன் இதன் வழியே அனைத்து வலைதளங்களுக்கும் செல்ல முடியும். வழக்கமான வலைதளங்களை தவிர்த்த பிற வலைதளங்களின் தகவல்களை கொண்டிருப்பதுடன் வழக்கமான பிரவுசர்களை தவிர்த்து, டி.ஓ.ஆர். உதவியுடன் டீப் வெப் வழியே பல்வேறு வலைதளங்களுக்கும் எளிதாக செல்ல இயலும்.
அது வழக்கம்போல் கூகுள் போன்றவை வழியாக தேடுவதால் எளிதில் கிடைக்காத தகவல்களை பெறுவதற்கு ஏற்ற வகையிலும் வடிவமைக்கப்பட்டு உள்ளது. எனவே இது இன்விசிபிள் வெப் என்றும் அழைக்கப்படுகிறது.
சிறப்பம்சம்
இது முற்றிலும், தகவல்களை எங்கிருந்து நாம் பெறுகிறோம் என்பதை பிறர் அறிந்து கொள்ள முடியாத வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. நீங்கள் யாரென்று அறிய முடியாதவராக இருந்தால் டீப் வெப்பில் இருந்து தகவல்களை பெற முடியாது என்பதும் இதன் சிறப்பம்சம்.
வழக்கமாக இணையதளங்களில் தகவல்களை பெறுவதற்கு உதவிடும் குரோம் போன்றவை தகவல்களை பதிவிறக்கம் செய்து தருவதுடன் அது எங்கிருந்து பெறப்பட்டது மற்றும் எப்பொழுது பெறப்பட்டது போன்ற தகவல்களையும் கொண்டிருக்கும். மேலும் தகவல் தேடுபவரின் தகவலையும் அது கொண்டிருக்கும்.
இணையதள பாதுகாப்பு
ஆனால், டீப் வெப் தகவல்களை நாம் நேரிடையாக பெற முடியாது. தகவல்கள் ஒரு பக்கத்தில் என்று இல்லாமல் டேட்டா பேஸ் எனப்படும் பல்வேறு தகவல் பக்கங்களில் இருந்து திரட்டி கொண்டு வரப்படுவதால் பிரவுசர்களால் குறிப்பிட்ட இடத்தை அடையாளம் காண முடியாது.
இணையதளத்தில் எண்ணற்ற கம்ப்யூட்டர்களை இணைத்திருந்தாலும், பரிமாற்றம் என்ற வகையில் தகவல்கள் எளிதில் கிடைக்க வழி செய்யப்படுகின்றன. என்கிரிப்டெட் தகவல்களாக பரிமாற்றம் செய்யப்படும்போது, அது உங்களது இருப்பிடத்தை கண்டறிவதற்கும் சிரமமாக இருப்பதுடன் நீங்கள் பெறும் தகவல்களின் தன்மை குறித்தும் அறிவதற்கு கடினமானதாக இருக்கும்.
தகவல்களை பெறுவது எப்படி?
டீப் வெப்பில் இருந்து தகவல்களை பெறுவது எப்படி? அதற்கு உதவுகிறது டி.ஓ.ஆர். (தி ஆனியன் ரூட்டர்) என்ற பிரவுசர். இதற்கு மாற்றாக ஐ.டு.பி. மற்றும் ப்ரீநெட் ஆகியவையும் டீப் வெப் தகவல்களை பெற உதவுகிறது. தற்போது, இணையதள தகவல்களை பெறுவதை கண்காணிக்கும் மறைமுக பணிகள் மற்றும் முறைகேடுகள், தனிநபர் தலையீடு ஆகியவை அதிகரித்திருப்பதால் இணையதளத்தில் பாதுகாப்புடன் தகவல்களை பெறுவது அவசியமானதாக உள்ளது.
அதற்கு டி.ஓ.ஆர். பயன்படுகிறது. இதனை முறையான வகையில் நாம் பயன்படுத்தி கொள்ளலாம். ராணுவம், காவல் துறை மற்றும் பத்திரிக்கையாளர்கள் என பல்வேறு துறையினரும் இதன் வழியே தகவல்களை பெறுவதற்கு இது உதவுகிறது. சட்ட அமலாக்க அமைப்புகள் முதற்கொண்டு இதனை பயன்படுத்தி வருகின்றனர்.
முறைகேடான செயல்கள்
டி.ஓ.ஆர் வழியே தகவல்களை பெறும்போது, அதனை பெறுபவர் குறித்த தகவல் மறைக்கப்படுவதால், குற்ற செயல்கள் நடைபெறுவதற்கான இடமாகவும் டீப் வெப் அமைந்து உள்ளது. போதை பொருள் கடத்தல், ஆயுதங்கள் கடத்தல், சிறுவர் பாலியல் காட்சிகள் மற்றும் கூலிக்கு ஆள் அமர்த்துதல் என பல்வேறு முறைகேடான செயல்கள் நடைபெறுவதற்கான தளமாகவும் இது அமைந்து விட்டது.
No comments:
Post a Comment