Friday, 7 March 2014

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு...


குர்ஆனில் துஆக்கள்!

ﻟَّﺎ ﺇِﻟَٰﻪَ ﺇِﻟَّﺎ ﺃَﻧﺖَ ﺳُﺒْﺤَﺎﻧَﻚَ ﺇِﻧِّﻲ ﻛُﻨﺖُ ﻣِﻦَ
ﺍﻟﻈَّﺎﻟِﻤِﻴﻦَ

“உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன்
யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்;
நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில்
ஒருவனாகி விட்டேன்”. 21:87

ﺭَﺑَّﻨَﺎ ﻇَﻠَﻤْﻨَﺎ ﺃَﻧﻔُﺴَﻨَﺎ ﻭَﺇِﻥ ﻟَّﻢْ ﺗَﻐْﻔِﺮْ ﻟَﻨَﺎ
ﻭَﺗَﺮْﺣَﻤْﻨَﺎ ﻟَﻨَﻜُﻮﻧَﻦَّ ﻣِﻦَ ﺍﻟْﺨَﺎﺳِﺮِﻳﻦَ

“எங்கள் இறைவனே!
எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக்
கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக்
கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள்
நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்”. 7:23

ﺭَﺑَّﻨَﺎ ﺃَﻓْﺮِﻍْ ﻋَﻠَﻴْﻨَﺎ ﺻَﺒْﺮًﺍ ﻭَﺛَﺒِّﺖْ ﺃَﻗْﺪَﺍﻣَﻨَﺎ
ﻭَﺍﻧﺼُﺮْﻧَﺎ ﻋَﻠَﻰ ﺍﻟْﻘَﻮْﻡِ ﺍﻟْﻜَﺎﻓِﺮِﻳﻦَ

“எங்கள் இறைவா! எங்களுக்குப்
பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள்
பாதங்களை உறுதியாக்குவாயாக! காஃபிரான
இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய)
உதவி செய்வாயாக!”. 2:250

ﺭَﺑَّﻨَﺎ ﻟَﺎ ﺗُﺰِﻍْ ﻗُﻠُﻮﺑَﻨَﺎ ﺑَﻌْﺪَ ﺇِﺫْ ﻫَﺪَﻳْﺘَﻨَﺎ ﻭَﻫَﺐ
ْﻟَﻨَﺎ ﻣِﻦ ﻟَّﺪُﻧﻚَ ﺭَﺣْﻤَﺔً ﺇِﻧَّﻚَ ﺃَﻧﺖَ ﺍﻟْﻮَﻫَّﺎﺏُ

“எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர்
வழியைக் காட்டியபின் எங்கள்
இதயங்களை (அதிலிருந்து)
தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன்
புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத்
என்னும்) நல்லருளை அளிப்பாயாக!
நிச்சயமாக நீயே பெருங்
கொடையாளியாவாய்!” 3:8

ﺭَﺑَّﻨَﺎ ﻟَﺎ ﺗُﺆَﺍﺧِﺬْﻧَﺎ ﺇِﻥ ﻧَّﺴِﻴﻨَﺎ ﺃَﻭْ ﺃَﺧْﻄَﺄْﻧَﺎ ﺭَﺑَّﻨَﺎ
ﻭَﻟَﺎ ﺗَﺤْﻤِﻞْ ﻋَﻠَﻴْﻨَﺎ ﺇِﺻْﺮًﺍ ﻛَﻤَﺎ ﺣَﻤَﻠْﺘَﻪُ ﻋَﻠَﻰ
ﺍﻟَّﺬِﻳﻦَ ﻣِﻦ ﻗَﺒْﻠِﻨَﺎ ﺭَﺑَّﻨَﺎ ﻭَﻟَﺎ ﺗُﺤَﻤِّﻠْﻨَﺎ ﻣَﺎ ﻟَﺎ
ﻃَﺎﻗَﺔَ ﻟَﻨَﺎ ﺑِﻪِ ﻭَﺍﻋْﻒُ ﻋَﻨَّﺎ ﻭَﺍﻏْﻔِﺮْ ﻟَﻨَﺎ
ﻭَﺍﺭْﺣَﻤْﻨَﺎﺃَﻧﺖَ ﻣَﻮْﻟَﺎﻧَﺎ ﻓَﺎﻧﺼُﺮْﻧَﺎ ﻋَﻠَﻰ ﺍﻟْﻘَﻮْﻡِ
ﺍﻟْﻜَﺎﻓِﺮِﻳﻦَ

“எங்கள் இறைவா! நாங்கள்
மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள்
தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம்
பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா!
எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய
சுமையை போன்று எங்கள்
மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா!
எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க
முடியாத) சுமையை எங்கள்
மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள்
பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக!
எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள்
மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள்
பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின்
மீது (நாங்கள் வெற்றியடைய)
எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!” 2:286

ﺭَﺑَّﻨَﺎ ﺍﻏْﻔِﺮْ ﻟَﻨَﺎ ﻭَﻟِﺈِﺧْﻮَﺍﻧِﻨَﺎ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺳَﺒَﻘُﻮﻧَﺎ
ﺑِﺎﻟْﺈِﻳﻤَﺎﻥِ ﻭَﻟَﺎ ﺗَﺠْﻌَﻞْ ﻓِﻲ ﻗُﻠُﻮﺑِﻨَﺎ ﻏِﻠًّﺎ
ﻟِّﻠَّﺬِﻳﻦَ ﺁﻣَﻨُﻮﺍ ﺭَﺑَّﻨَﺎ ﺇِﻧَّﻚَ ﺭَﺀُﻭﻑٌ ﺭَّﺣِﻴﻢٌ

“எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான்
கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான
எங்கள் சகோதரர்களுக்கும்
மன்னிப்பு அருள்வாயாக; அன்றியும் ஈமான்
கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய
இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக!
எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க
இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன்”. 59:10

ﺭَﺑَّﻨَﺎ ﺍﻏْﻔِﺮْ ﻟَﻨَﺎ ﺫُﻧُﻮﺑَﻨَﺎ ﻭَﺇِﺳْﺮَﺍﻓَﻨَﺎ ﻓِﻲ ﺃَﻣْﺮِﻧَﺎ
ﻭَﺛَﺒِّﺖْ ﺃَﻗْﺪَﺍﻣَﻨَﺎ ﻭَﺍﻧﺼُﺮْﻧَﺎ ﻋَﻠَﻰ ﺍﻟْﻘَﻮْﻡِ
ﺍﻟْﻜَﺎﻓِﺮِﻳﻦَ

“எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும்
எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச்
செய்தவற்றையும் மன்னித் தருள்வாயாக!
எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச்
செய்வாயாக! காஃபிர்களின்
கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ
உதவி புரிவாயாக”. 3:147

ﺭَﺑَّﻨَﺎ ﺁﻣَﻨَّﺎ ﻓَﺎﻛْﺘُﺒْﻨَﺎ ﻣَﻊَ ﺍﻟﺸَّﺎﻫِﺪِﻳﻦ
َ
“எங்கள் இறைவனே! நாங்கள் (இவ் வேதத்தின்
மீது) நம்பிக்கை கொண்டோம்; எனவே,
(இவ்வேதம் சத்தியமானது என்று,)
சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ
பதிவு செய்து கொள்வாயாக!” 5:83

ﺭَﺑَّﻨَﺎ ﺁﻣَﻨَّﺎ ﻓَﺎﻏْﻔِﺮْ ﻟَﻨَﺎ ﻭَﺍﺭْﺣَﻤْﻨَﺎ ﻭَﺃَﻧﺖَ ﺧَﻴْﺮُ
ﺍﻟﺮَّﺍﺣِﻤِﻴﻦ
َ
“எங்கள் இறைவா! நாங்கள் உன் மீது ஈமான்
கொள்கிறோம்; நீ எங்கள்
குற்றங்களை மன்னித்து, எங்கள்
மீது கிருபை செய்வாயாக!
கிருபையாளர்களிலெல்லாம் நீ மிகவும்
மேலானவன்”. 23:109

ﺃَﻧِّﻲ ﻣَﺴَّﻨِﻲَ ﺍﻟﻀُّﺮُّ ﻭَﺃَﻧﺖَ ﺃَﺭْﺣَﻢُ ﺍﻟﺮَّﺍﺣِﻤِﻴﻦ
َ
“நிச்சயமாக என்னை துன்பம்
தீண்டியிருக்கிறது; (இறைவனே!)
கிருபை செய்பவர்களிலெல்லாம் நீயே மிகக்
கிருபை செய்பவனாக இருக்கின்றாய்” 21:83

ﺣَﺴْﺒِﻲَ ﺍﻟﻠَّﻪُ ﻟَﺎ ﺇِﻟَٰﻪَ ﺇِﻟَّﺎ ﻫُﻮَ ﻋَﻠَﻴْﻪِ ﺗَﻮَﻛَّﻠْﺖُ
ﻭَﻫُﻮَ ﺭَﺏُّ ﺍﻟْﻌَﺮْﺵِ ﺍﻟْﻌَﻈِﻴﻢِ

“எனக்கு அல்லாஹ்வே போதுமானவன்.
(வழிபடுவதற்குரிய) நாயன்
அவனையன்றி (வேறுயாரும்) இல்லை; அவன்
மீதே நான் பரிபூரண
நம்பிக்கை கொண்டுள்ளேன் - அவன் தான்
மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி”
9:129

ﺭَﺏِّ ﺍﺷْﺮَﺡْ ﻟِﻲ ﺻَﺪْﺭِﻱ ﻭَﻳَﺴِّﺮْ ﻟِﻲ ﺃَﻣْﺮِﻱ
ﻭَﺍﺣْﻠُﻞْ ﻋُﻘْﺪَﺓً ﻣِّﻦ ﻟِّﺴَﺎﻧِﻲ ﻳَﻔْﻘَﻬُﻮﺍ
ﻗَﻮْﻟِﻲ

“இறைவனே! எனக்காக என் நெஞ்சத்தை நீ
(உறுதிப்படுத்தி) விரிவாக்கி தருவாயாக!” “என்
காரியத்தை எனக்கு நீ எளிதாக்கியும்
வைப்பாயாக!” “என் நாவிலுள்ள
முடிச்சையும் அவிழ்ப்பாயாக!” “என்
சொல்லை அவர்கள் விளங்கிக்
கொள்வதற்காக!” 20:25-28

ﺭَّﺏِّ ﺯِﺩْﻧِﻲ ﻋِﻠْﻤًﺎ

“இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு
அதிகப்படுத்துவாயாக!” 20:114

ﺭَﺑَّﻨَﺎ ﻫَﺐْ ﻟَﻨَﺎ ﻣِﻦْ ﺃَﺯْﻭَﺍﺟِﻨَﺎ ﻭَﺫُﺭِّﻳَّﺎﺗِﻨَﺎ ﻗُﺮَّﺓَ
ﺃَﻋْﻴُﻦٍ ﻭَﺍﺟْﻌَﻠْﻨَﺎ ﻟِﻠْﻤُﺘَّﻘِﻴﻦَ ﺇِﻣَﺎﻣًﺎ

“எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும்,
எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக்
கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக!
இன்னும்
பயபக்தியுடையவர்களுக்கு எங்களைஇமாமாக
(வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக!. 25:74

ﺭَﺏِّ ﻫَﺐْ ﻟِﻲ ﻣِﻦَ ﺍﻟﺼَّﺎﻟِﺤِﻴﻦ
َ
“என்னுடைய இறைவா! நீ
எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத்
தந்தருள்வாயாக”. 37:100

ﻋَﺴَﻰٰ ﺭَﺑُّﻨَﺎ ﺃَﻥ ﻳُﺒْﺪِﻟَﻨَﺎ ﺧَﻴْﺮًﺍ ﻣِّﻨْﻬَﺎ ﺇِﻧَّﺎ ﺇِﻟَﻰٰ
ﺭَﺑِّﻨَﺎ ﺭَﺍﻏِﺒُﻮﻥَ

“எங்களுடைய இறைவன் இதைவிட
மேலானதை எங்களுக்கு மாற்றித் தரக்கூடும்;
நாங்கள் (தவ்பா செய்து) நிச்சயமாக
எங்களுடைய இறைவன்
மீதே ஆதரவு வைக்கிறோம்”. 68:32

ﺭَّﺏِّ ﺍﻏْﻔِﺮْ ﻟِﻲ ﻭَﻟِﻮَﺍﻟِﺪَﻱَّ ﻭَﻟِﻤَﻦ ﺩَﺧَﻞَ ﺑَﻴْﺘِﻲَ
ﻣُﺆْﻣِﻨًﺎ ﻭَﻟِﻠْﻤُﺆْﻣِﻨِﻴﻦَ ﻭَﺍﻟْﻤُﺆْﻣِﻨَﺎﺕ
ِ
“என் இறைவா! எனக்கும், என்
பெற்றோருக்கும், என் வீட்டில்
நம்பிக்கையாளர்களாகப்
பிரவேசித்தவர்களுக்கும், முஃமினான
ஆண்களுக்கும், முஃமினான பெண்களுக்கும், நீ
மன்னிப்பளிப்பாயாக!. 71:128

ﺭَﺑَّﻨَﺎ ﺗَﻘَﺒَّﻞْ ﻣِﻨَّﺎﺇِﻧَّﻚَ ﺃَﻧﺖَ ﺍﻟﺴَّﻤِﻴﻊُ ﺍﻟْﻌَﻠِﻴﻢُ
ﻭَﺗُﺐْ ﻋَﻠَﻴْﻨَﺎﺇِﻧَّﻚَ ﺃَﻧﺖَ ﺍﻟﺘَّﻮَّﺍﺏُ ﺍﻟﺮَّﺣِﻴﻢُ

“எங்கள் இறைவனே!
எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக்
கொள்வாயாக; நிச்சயமாக
நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும்
அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களை(க்
கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை)
மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க
மன்னிப்போனும்,
அளவிலா அன்புடையோனாகவும்
இருக்கின்றாய்.” 2:127-128

ﺭَﺑَّﻨَﺎ ﺁﺗِﻨَﺎ ﻓِﻲ ﺍﻟﺪُّﻧْﻴَﺎ ﺣَﺴَﻨَﺔً ﻭَﻓِﻲ ﺍﻟْﺂﺧِﺮَﺓِ
ﺣَﺴَﻨَﺔً ﻭَﻗِﻨَﺎ ﻋَﺬَﺍﺏَ ﺍﻟﻨَّﺎﺭِ

“ரப்பனா! (எங்கள் இறைவனே!)
எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத்
தந்தருள்வாயாக; மறுமையிலும்
நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; இன்னும்
எங்களை(நரக) நெருப்பின்
வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!”
2:201

No comments:

Post a Comment